200 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை

200 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை
X

200 Export Centers across the country, Central Govt-நாடு முழுவதும் 200 மாவட்டங்களில், ஏற்றுமதி மையங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. (கோப்பு படம்)

200 Export Centers across the country, Central Govt- இந்தியாவில், முக்கிய நகரங்களை உள்ளடக்கிய 200 மாவட்டங்களில், ஏற்றுமதி மையங்களை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு, நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நடப்பாண்டில், முதல்கட்டமாக திருப்பூர் உள்ளிட்ட 75 மாவட்டங்கள் இதற்காக தேர்வாகி உள்ளன.

200 Export Centers across the country, Central Govt- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஏற்றுமதி வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியில் தேசிய அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.இதேபோல் பல்வேறு வகைகளிலான ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில், நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 75 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நிலம் தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி தொடங்கியுள்ளது.

ஏற்றுமதி வர்த்தகத்தின் தற்போதைய நிலை, தொடர் மேம்பாட்டு ஆய்வு, உற்பத்தி தர நிர்ணயம், கண்காட்சி வளாகம், கூட்ட அரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி என பல்வேறு வசதிகளுடன் ஏற்றுமதி மையம் அமைய உள்ளது.அதற்காக தலா 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, நடப்பு ஆண்டில் 75 மாவட்டங்களில், இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, தமிழகத்தில் திருப்பூர் உட்பட சில மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. திருப்பூர் நகரப்பகுதியில் கூடுதல் தொழில்நுட்ப வாய்ப்புகளுடன் பிரமாண்டமான ஏற்றுமதி மையம் அமையும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இத்திட்ட பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இத்திட்ட பணிகளை மேற்கொள்ளும்.மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்கும். மாநில அரசும், ஏற்றுமதியாளர் அமைப்பும் தலா 20 சதவீத பங்களிப்பை செலுத்தி திட்டம் நிறைவேற்றப்படும். ஏற்றுமதி மையம் வாயிலாக புதிய தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும் என்பதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்தகட்டத்தை நோக்கி நிச்சயம் பயணிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!