சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு

சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு

பிரதமர் மோடி.

சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப்பாதிப்பிற்கு பிரதமர் மோடி 2 ரூ.450 கோடி நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை அருகே வங்க கடலில் கடந்த டிசம்பர் 2 ,3 தேதிகளில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் ஐந்தாம் தேதி ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம்-நெல்லூர் இடையே கரையை கடந்தது. ஆனாலும் சென்னை அருகே புயல் மையம் கொண்டிருந்தபோது சென்னையில் இரண்டு நாட்கள் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடானது. அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகள் தண்ணீரால் நிரம்பி நின்றதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் விமான சேவையும் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில், விமானம், தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் சென்னை நகரமே ஒரு தீவு போல் மாறியது. மேலும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர். மின்சார இணைப்பானது இன்னும் முழுவதுமாக வழங்கப்படவில்லை.

வெள்ளம் வடிய ஆரம்பித்தாலும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ரூ. 5060 கோடி நிதி ஒதுக்குமாறு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து விட்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story