ரயில்களில் இனி செல்ஃபோன் சார்ஜ் செய்ய முடியாது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய இரயில்வே விரைவில் ரயில் பயணிகள் பயணம் செய்யும் போது தங்கள் மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்காது.மொபைல் போன்மற்றும் பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மின் இணைப்பு (PLUG POINT-களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மட்டும்) அணைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது
ரயில்களில் தீப்பிழம்பு பொருட்களை ஏற்றிச் செல்வது ரயில்வே சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், குற்றம் புரிந்தவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைஅல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் பிரிவு 165ன் கீழ் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்ஃபோனை சார்ஜ் செய்ய பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு பெங்களூர் - ஹசுர் சாஹிப் நன்தத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அது சார்ஜரால் ஏற்பட்ட மின்கசிவு என கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ரயில்வே வாரியத்திடம் இத்தகைய யோசனையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது
அண்மையில் சில ரயில்களில் மின்கசிவால் தீ விபத்து நேர்ந்ததால்,முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சில ரயில் தீ விபத்துகள் ஏற்பட்டதன் விளைவாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu