நிதி மோசடி வழக்குகளில் சிக்கி தப்பிய குற்றவாளி சிபிஐ யால் கைது

நிதி மோசடி வழக்குகளில் சிக்கி தப்பிய குற்றவாளி   சிபிஐ யால் கைது
X

கேரளாவின் காசர்கோடு மற்றும் சில பகுதிகளில் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் , ஒரு நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2009ம் ஆண்டு, அன்னிய செலாவணி தொழில் என்ற பெயரில் ஒரு மோசடி திட்டத்தை செயல்படுத்தினர். இதில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு, 61 நாட்களுக்குப்பின் மாதம் 7 சதவீத வட்டி தருவதாகவும், இத்திட்டத்தில் மக்களை சேர்த்துவிடுபவர்களுக்கு மாதம் 2 சதவீத கமிஷன் தொகையும் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினர்.

இத்திட்டத்தின் கீழ் இவர்கள் சுமார் ரூ.9,93,68,000/- முதலீடு திரட்டினர். ஆனால், சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு வட்டியையும் தராமல், முதலீடு செய்த பணத்தையும் தராமல் ஏமாற்றினா்.

இந்த மோசடி தொடர்பாக இவர்கள் மீது, சென்னை சிபிஐ 4 வழக்குகள் பதிவு செய்தது. இது தவிர இவர்கள் மீது 5வது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டில் இவர்கள், முதலீட்டாளர்களை ரூ.50 லட்சம் முதலீடு செய்யும்படி தூண்டி ரூ.19 லட்சம் திரட்டியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு வட்டியை தராமல் ஏமாற்றியுள்ளனர்.

இந்த புகார்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் இவர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் 6 பேர் சிக்கிய நிலையில், ஒருவர் மட்டும் தப்பித்து சவுதி அரேபியா சென்றார். இவரைப் பிடிக்க இன்டர்போல் மூலமாக சிபிஐ ரெட் அலர்ட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து இவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ரியாத்தில் இருந்து தில்லி கொண்டு வரப்பட்ட அந்த நபரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அந்த நபரை ஏப்ரல் 8ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிபிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story