/* */

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம்

டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம்
X

மேகதாது 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அது பற்றி விவாதிக்க கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் 16வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக கூட்டம் பின்னர் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை குறித்த கர்நாடகத்தின் கோரிக்கையை விவாதிக்க அனுமதி வழங்கக்கூடாது என ஜல் சக்தி துறைக்கு அறிவுறுத்தவும், தமிழகம் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூலை 6 ஆம் தேதி நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 22 காலை 11.30 மணிக்கு எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள கூட்டம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 July 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...