முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..!

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..!
X

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தலைவர் ஹல்தார்.

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலியாக வரும் 23-ம் தேதி அறிவிக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் அதன் தலைவர் ஹல்தார் தஞ்சாவூர் ஆய்வில் தெரிவித்தார். இது, கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் மேகதாது திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில், அந்த கூட்டத்தை ஜூலை 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது, அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story