மாணவிகளை நிர்வாண படம் எடுத்த வழக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் சிறை
நிர்வாண படம் வழக்கில் தண்டனை அடைந்தவர்கள்.
100க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து அஜ்மீர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, அஜ்மீர் நீதிமன்றம் 6 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புண்ணிய ஸ்தலங்களில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரும் ஒன்று. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் பெண்களின் நிர்வாணப் படங்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் பரப்பப்பட்டன. இந்த வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அன்வர் சிஷ்டி, ஃபரூக் சிஷ்டி, பர்வேஸ் அன்சாரி, புத்தன் அலகபாதி என்ற மொய்னுல்லா, லல்லி என்ற இஷ்ரத், கைலாஷ் சோனி, மகேஷ் லுதானி, ஷம்சு சிஷ்டி என்ற மென்ராடோனா மற்றும் டார்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அஜ்மீரில் உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவரான ஃபரூக் சிஷ்டி, இவருடன் சேர்ந்து பண்ணை வீடுகள் மற்றும் உணவகங்களில் பார்ட்டி என்ற பெயரில் சிறுமிகளை அழைத்து போதையில் குடித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். பின்னர் சிறுமிகளை நிர்வாணமாக படம் எடுப்பது வழக்கம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிகளை பிளாக்மெயில் செய்து, மற்ற பெண்களை தம்முடன் அழைத்து வரும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரு சில பெண்கள் மட்டுமே குரல் எழுப்பினர். அதே சமயம், காவல்துறையும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கியது. சில சிறுமிகள் போலீசில் புகார் செய்தபோது, அவர்களுக்கு மிரட்டல் வர ஆரம்பித்தது. எனினும் பாதிக்கப்பட்ட 18 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தான் இன்று ஃபரூக் சிஸ்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu