எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான   வழக்கு இன்று விசாரணை
X

எடப்பாடி பழனிச்சாமி (பைல் படம்).

Edappadi Palanisamy News - திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Edappadi Palanisamy News - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தபோது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றியதோடு 3 மாத காலத்துக்குள் அதை முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!