அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
X

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். (பைல் படம்)

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக கடுமையாக சரிந்தன. அதானி குழுமம் பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு கடன்களை அடைத்து முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அதானி குழுமம் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே வரும் ஏப்ரல் 2025 முதிர்வுத் தேதிக்கு முன், ரூ.7,374 கோடி ஈக்விட்டி-பேக்டட் ஃபைனான்சிங் நிலுவை தொகைகளை செலுத்தும் என்று அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் அண்மையில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதிலளித்தார்.

அதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture