இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து
பைல் படம்.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வருடமும் தேசிய கட்சி, மாநில கட்சி ஆகிவற்றின் அந்தஸ்தை பெறுவதற்கு குறிப்பிட்ட வாக்குகள் சதவீதம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவையை கணக்கிட்டு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.
இதன் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தேசிய கட்சிகள் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
மேலும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-ஐ நாகாலாந்தில் மாநில கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதேபோல “திப்ரா மோத்தா கட்சியை” மாநில கட்சியாக திரிபுராவில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
மேகலயாவில் உள்ள மக்களின் குரல் கட்சி (Voice of the people party) , ஆந்திராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆகியவற்றிற்கு மாநில கட்சி என்று வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது .
மேலும் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சி என்று வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu