40 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து: சரிபார்ப்பின்போது அதிர்ச்சி தகவல்

40 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து: சரிபார்ப்பின்போது அதிர்ச்சி தகவல்
X
டெல்லியில் நடந்த சரிபார்ப்பின்போது 40 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் 40 ஆயிரம் பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது தலைநகர் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி அரசு சிறப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

டெல்லியில் போலி ரேஷன் கார்டுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் முகவரிக்கு வராததால், ஓராண்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களின் ரேஷனை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுமாறு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வபோலி ரேஷன் கார்டுகள் சரிபார்ப்பின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராததால், ஓராண்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களாக ரேஷன் எடுக்காத ரேஷன் கார்டுதாரர்கள் குறித்து டெல்லி அரசின் உணவு மற்றும் வழங்கல் துறை விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் தற்போது 19.5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 71 லட்சம் பேருக்கு ரேஷன் விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் கார்டு பெற்றவர்கள், அசௌகரியத்திற்கு ஆளாகாமல் இருக்க, தொடர்ந்து ரேஷனை எடுத்துக் கொள்ள வேண்டும் என, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் உசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரேஷன் கார்டுகளுக்கான ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளதாகவும், பலர் ரேஷன் கார்டுகளை பெற வரிசையில் நிற்கின்றனர் என்றும் அவர் கூறினார். ரேஷன் கார்டுகளின் ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது