இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்தலாமா- பரிசோதனை தொடங்க நிபுணர் குழு ஒப்புதல்

இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்தலாமா- பரிசோதனை தொடங்க நிபுணர் குழு ஒப்புதல்
X
இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் என இருவேறு தடுப்பூசிகளை ஒரே நபருக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா..? என மருத்துவ பரிசோதனையை தொடங்க நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை தான் 2-வது தவணையிலும் செலுத்தி கொள்ளும் நடைமுறை உள்ளது. முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும், 2 ஆவது டோஸ் வேறொரு நிறுவனத்தின் தடுப்பூசியும் செலுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் என இருவேறு தடுப்பூசிகளை ஒரே நபருக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தொடங்க உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil