மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து

மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து
X
மும்பை குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 11 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தீவிரம்

குர்லா கிழக்கில் உள்ள நாயக் நகரில் நேற்று இரவு நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். 11க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று உள்ளூர் கார்ப்பரேட்டர் பிரவினா மொராஜ்கர் தெரிவித்தார்.

இரவு 12 மணியளவில் தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏழு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு மீட்பு வேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை அனுப்பியதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், 20 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.


கார்ப்பரேட்டர் பிரவினா மொராஜ்கர் கூறுகையில், "இந்த நான்கு பாழடைந்த கட்டிடங்கள் கொண்ட காலனியில் ஐந்து முதல் 6 ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும், குடியிருப்பாளர்கள் தொடர்ந்து தங்கினர். திங்கள்கிழமை இரவு, ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. ஆனால் தீயணைப்பு படையினர் வருவதற்குள் ஐந்து முதல் ஆறு பேர் இடிபாடுகளில் இருந்து அகற்றப்பட்டனர். காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் பிரிவினர் தேடுதல் மற்றும் மீட்பு பணியை தொடங்கியுள்ளதாகவும், இது முடிவடைய ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆகும் என்றும் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்