அனைத்து தரப்பினருக்கும் உகந்த பட்ஜெட்: நிதித்துறை இணையமைச்ச்சர்

அனைத்து தரப்பினருக்கும் உகந்த பட்ஜெட்: நிதித்துறை இணையமைச்ச்சர்
X

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட், அனைத்து தரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்; காகிதம் இல்லாத இரண்டாவது பட்ஜெட் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் 5 மாநிலங்களில் நடைபெறுவதால், பட்ஜெட்டில் சுமையான அறிவிப்புகள் இருக்காது; சுகமான சலுகைகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில், அவை வளாகத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட், நிச்சயம் அனைத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்; அதற்கேற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை வழங்குவார். இந்த பட்ஜெட், அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் இருக்கும்" என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!