குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி
X
குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என மாயாவதி தெரிவித்துள்ளார்

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி கூறுகையில், "நாங்கள் இந்த முடிவை பாஜக அல்லது தேமுகூ- க்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிக்கு எதிராகவோ எடுக்கவில்லை, எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து எடுத்துள்ளோம்" என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் தன்னிடம் கருத்து கேட்கவில்லை என்றும் மாயாவதி கூறினார்.

முன்னதாக, முர்மு வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைக் கோரினார். மூன்று தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் முர்மு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture