குறைவான நிலக்கரி விநியோகம் : டெல்லிக்கு மின்தடை எச்சரிக்கை

குறைவான நிலக்கரி விநியோகம் : டெல்லிக்கு மின்தடை எச்சரிக்கை
X

தலைநகர் டெல்லியில் உள்ள மின்உற்பத்தி நிலையம்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் தடைபட்டால், அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் மின்தடை ஏற்படும் என அமைச்சர் கூறினார்

இந்தியாவின் 135 நிலக்கரி எரிபொருள் ஆலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை, நாட்டின் மொத்த மின்சாரத்தில் 70 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. இந்த ஆலைகளில் தற்போது மூன்று நாட்களுக்குள் மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய மின்தொகுப்பின் தரவு காட்டுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களில் மின்தடை ஏற்படும் என்று டெல்லி அமைச்சர் ஒருவர் இன்று கூறினார். மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் நீண்ட மின்வெட்டு உருவாக வாய்ப்புள்ள தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களின் வரிசையில் டெல்லியும் இணையும் என கவலை தெரிவித்தார்.

இது குறித்து டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், "நிலக்கரி வழங்குவது சீரடையவில்லை எனில் , இரண்டு நாட்களில் டெல்லியில் மின்தடை ஏற்படக்கூடும். டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் குறைந்தபட்சம் ஒரு மாத நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும், ஆனால் இப்போது அது ஒரு நாளாக குறைந்துள்ளது. தற்போது அனைத்து ஆலைகளும் 55 சதவிகிதம் அளவிற்கே இயங்குவதால், ஆலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்ல மத்திய ரயில்வே வேகன்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், என கூறினார்,

மேலும் அவர் கூறுகையில், கோவிட் -19 இரண்டாவது அலையின் போது மருத்துவ ஆக்ஸிஜன் விநியோக நெருக்கடி போலவே மனிதனால் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது. அங்கு அரசியல் நடக்கிறது. நீங்கள் ஒரு நெருக்கடியை உருவாக்கி, அதைத் தீர்ப்பதன் மூலம் சில பெரிய பிரச்சனைகளை தீர்த்ததாக காட்டிக்கொள்ள செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது என்று கூறினார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி மற்றும் எரிவாயுவை ஏற்பாடு செய்வதில் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். "டெல்லி மின் நெருக்கடியை சந்திக்க நேரிடும். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதைத் தவிர்க்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். இதற்கிடையில், பிரதமருக்கு தனிப்பட்ட தலையீடு கோரி நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!