குஜராத் தேர்தல்: சாதனை மேல் சாதனை புரியும் பாஜக
1995 முதல் குஜராத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வியடையாத பாரதிய ஜனதா கட்சி. 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் இவ்வளவு பெரும்பான்மையுடன் எந்த ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதில்லை.
1985ல் குஜராத்தில் மாதவ்சிங் சோலங்கி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, அது சாதாரண வெற்றியல்ல. மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் 149 இடங்களை அக்கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் வாக்கு சதவீதம் 55 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது, இது பாஜக கூட இன்னும் தொடவில்லை. ஆனால் 1995 முதல், குஜராத் பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. தற்போது 150 இடங்களை வென்றால் அது புதிய சாதனையாகும்
குஜராத்தில் 182 சட்டமன்ற இடங்கள் உள்ளன, பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 158 இடங்களில் முன்னணியில் இருப்பதால், 149 இடங்கள் என்ற வரலாறு காணாத சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. கருத்துக் கணிப்புகள் பிஜேபி தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இது மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் சாதனையை சமன் செய்யும் முடிவு.
2014ல் டெல்லி சென்ற பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடாததால், பாஜக 149 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்பட்சத்தில், அது அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும். குஜராத்தில் இருந்து டில்லிக்கு நரேந்திர மோடி சென்ற பிறகும், தேர்தலுக்குப் பின் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், பலருக்கு முதல்வர்களின் பெயர்கள் நினைவில் இல்லை.
இந்தத் தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017ஆம் ஆண்டு முந்தைய சட்டமன்றத் தேர்தலை விட சுமார் 4 சதவீதம் குறைவாக இருந்தது. பதிவு செய்யப்பட்ட 4.9 கோடி வாக்காளர்களில், 2022 தேர்தலில் 3.16 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, பாஜக 157 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 16 இடங்களிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu