மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பெங்களுருவில் நடந்த சோகம்

மத்திய அமைச்சர் கார் மோதி பாஜக தொண்டர் உயிரிழப்பு! பெங்களுருவில் நடந்த சோகம்
X
மத்திய இணை அமைச்சரின் கார் மோதியதில் பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே போட்டியிடுகிறார். பெங்களுரு கே.ஆர்.புரம் பகுதியில், ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது அவரது காரின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக தனது வாகனத்தின் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது பின்புறமாக ஒரு ஸ்கூட்டியில் வந்த பாஜக தொண்டர், காரின் கதவின் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அடுத்த நொடி அந்த வழியாக வந்த பேருந்து அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பிரகாஷ் மற்றும் வயது 63 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இபிகோ பிரிவு 304 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 283 (பொது வழியில் அல்லது வழிசெலுத்தல் வரிசையில் ஆபத்து அல்லது இடையூறு) ஆகியவற்றின் கீழ் கார் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் நடந்த பேரணியில் பரப்புரை செய்து கொண்டிருந்த போது விபத்து நேர்ந்துள்ளது. ஆனால், அந்த நேரத்தில் அமைச்சர் அந்த காரில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா கரந்த்லாஜே, "எங்கள் தொண்டர் பிரகாஷ் விபத்தில் சிக்கினார். நான் பேரணிக்கு முன்புறம் சென்றிருந்தேன். சாலையின் முடிவில் கார் நின்றது. அப்போது அவர் கார் மீது மோதி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மீது பேருந்து மோதியது. பிரகாஷின் பிரேதப் பரிசோதனை விரைவில் செய்யப்படுவதை உறுதி செய்ய காவல் துறை மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. நாங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான இழப்பீட்டை வழங்கை நடவடிக்கை எடுப்போம்" என்று கரந்த்லாஜே தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!