கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்
X
கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

அசாம் மாநிலம் கௌகாத்தி மாநகராட்சியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியும் கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றின. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 58ல் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் மகத்தான வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி