முதல்வர் பதவியை தியாகம் செய்தது பா.ஜ.க: ஷிண்டே உணர்ச்சிகரமாக பேச்சு..!
மகாராஷ்டிரா புதிய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே.
மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், சிவசேனா உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். ஆனால், அதிருப்தி தெரிவித்த எம்.எல்.ஏ.,க்கள் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு சொகுசு விடுதியில் பதுங்கிக்கொண்டனர். இதையடுத்து உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் திரும்பிய ஏக்னாத் ஷிண்டே, மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு பின்னர் முதன் முதலாக இன்று சட்டசபை கூடியது. அப்போது, சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், பாலசாகிப் தாக்கரேயின் கனவை தமது தலைமையிலான புதிய அரசு நிறைவேற்றும் என்றார். அனைவரும் பட்னாவிஸ் தான் முதல்வர் ஆவார் என நினைத்தனர் எனவும், முதல்வர் பதவி தனக்கு தானாக வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், பா.ஜ.க தனக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்ததாகவும் பெரிதும் சிலாகித்தும் உணர்ச்சிவசப்பட்டும் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu