Bjp Candidate Selection பாஜ சார்பில் 123 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார்:விரைவில் அறிவிப்பு
Bjp Candidate Selection
பாரதீய ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மத்திய தேர்தல் குழு கூட்டமானது நேற்றிரவு டில்லியில் நடந்தது.
இந்தியாவில் மே மாதத்தோடு தற்போதுள்ள லோக்சபாவின் காலம் முடிவடைவதால் ஏப்ரல்மாதத்தில் நாடு முழுவதும் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் இம்மாத முதல் வாரத்திற்குள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி கூட்டணியிலும் தொகுதிப்பங்கீடு நடந்து வருகிறது. பாஜ சார்பில் இதற்கான ஆலோசனைக்கூட்டம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
Bjp Candidate Selection
இந்த கூட்டமானது நேற்று இரவு விடிய விடிய நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சுமார் 100 முதல் 125 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் அந்த முதல் பட்டியல் வெயியிடப்படலாம் என்றும் பாஜ வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கிறது.
நேற்று நடந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
லோக்சபா தேர்தல் தேதியானது இந்த மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நாடு முழுவதும் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 3வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திரமோடி உறுதியாக உள்ளார்.
எப்படியாவது இந்த தேர்தலில் 370 இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்று பாஜ திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாஜ வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாஜ முடிவு செய்துள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜ மத்திய தேர்தல் குழுவானது முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்து ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கூட்டமானது நள்ளிரவு வரை நீடித்துள்ளது. சுமார் 4 மணி நேரம் இக்கூட்டம் நடந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாஜவின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பிரதமர் மோடி தனது ஆபீசில் அமித்ஷா மற்றும் நட்டாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேவேந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்ட்வியா, புஷ்கர்சிங் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா, கேசவ் பிரசாத்மவுரியா, யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
உ.பி, உத்தரகண்ட், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத், உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாகவும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது.
Bjp Candidate Selection
அந்தந்த மாநிலத் தலைவர்களுடன் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்கள் தெரிவிக்கும் பெயரை குறித்து வைத்துக்கொண்டு இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
பஞ்சாப், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களின் வேட்பாளர் தேர்வானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த 3 மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையானது முடியாத நிலையில் அதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Bjp Candidate Selection
கடந்த 2019 தேர்தலின்போதும் இதுபோல்தான் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது பாஜ. தற்போதும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வெளியிட உத்தேசித்துள்ளது.
வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்க பாஜ அதிக அக்கறை காட்டி வருகிறது.
காங்கிரஸ் சார்பில் இன்னும் இ டஒதுக்கீடு செய்யாத நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முன்னதாகவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உத்தேசித்துள்ளது. மோடி வாரணாசியிலும், ராஜ்நாத்சிங் லக்னோவிலும், அமித்ஷா குஜராத்திலும், நிதின்கட்காரி நாகபுரியிலும், பிரகலாத் ஜோஷி கர்நாடகாவில் உள்ள தார்வாடியிலும், அனுராக்தாக்கூர் இமாசலப்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூரிலும் களமிறங்க தயாராகி விட்டனர்.
3 வது முறையாக பாஜ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் ஹாட்ரிக் வெற்றியாக கருதப்படும்...அதனைப் பிடிக்கவே பாஜ காய்களை சாதுர்யமாக நகர்த்தி வருகிறது. மக்களின் மனதில் என்ன உள்ளதோ?... பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu