நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி

நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி
X

கோப்பு படம் 

கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில், வரும் 8-ஆம் தேதி முதல், மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை அடுத்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், நவம்பர் 8-ஆம் தேதி முதல், மீண்டும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அது வெளியிட்டுள்ளது. அதில், பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்வதற்கு முன்பு, ஊழியர்கள் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய வேண்டும். ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க, கூடுதல் பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்தலாம் என்று கூறப்படுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself