மும்பையில் ஆட்டோ ஓட்டிய பில்கேட்ஸ்.. இணையத்தில் வைரல்
மும்பை சாலையில் ஆட்டோ ஓட்டிய பில்கேட்ஸ்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் மும்பை சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழும் வீடியோ காட்டசி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க தொழிலதிபரான பில் கேட்ஸ், மென்பொருள் உருவாக்குநர் ஆவார். இவர் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனின் இணை நிறுவனராவார்.
பில்கேட்ஸின் தலைமையின் கீழ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட பல புதுமையான மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்கி வெளியிட்டது, இது உலகளவில் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மேலாதிக்க இயக்க முறைமையாக மாறியது. இவர் 2000 ஆம் ஆண்டு வரை மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். 2014 வரை குழுவின் தலைவராக இருந்தார்.
2000 ஆம் ஆண்டில், அவரும் அவரது மனைவி மெலிண்டாவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவினர். இது உலகளாவிய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தீவிர வறுமையைக் குறைப்பதற்கும் நோக்கமாக உள்ளது. இந்த அறக்கட்டளை தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதாரத் தலையீடுகளுக்கான அணுகலை வழங்க உதவியது.
மேலும் கல்வி சீர்திருத்தம், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிற தொண்டு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் தனது பரோபகாரப் பணிகளில் அதிக கவனம் செலுத்த மைக்ரோசாப்ட் குழுவிலிருந்து விலகினார்.
தற்போது இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் மும்பை சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார்.
அப்போது பில்கேட்ஸ் மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ ஒன்றினை மும்பை சாலையில் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை, தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: ‛ இது இனி பில்கேட்ஸ் கார்'... இதை ஓட்டிப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்த முறை பில்கேட்ஸ் இந்தியா வரும் போது சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் தான் ‛ ட்ரியோ ஆட்டோ ரிக்சா பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu