ஜூன் 3 வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை

ஜூன் 3 வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை
X
விசா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3 ஆம் தேதி வரை கைது செய்ய, டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது, விதிகளுக்கு புறம்பாக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக, சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில், அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில், அண்மையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதுதவிர, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

இவ்வழக்கில், தம்மை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய தடை கேட்டு, டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனு அளிக்க்கப்பட்டது. இதை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய, ஜூன் 3ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!