கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை
X

Ban Gobi Manchurian in Goa- கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை (கோப்பு படம்)

Ban Gobi Manchurian in Goa- கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிககப்பட்டுள்ளது.

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிந்தால் இனிமேல் நீங்களும் சாப்பிடமாட்டீர்கள்.

உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு ஃபாஸ்ட் புட் உணவு தான் கோபி மஞ்சூரியன். காலிஃப்ளவரை மசாலாக்களை சேர்த்து பிரட்டி, எண்ணெயில் பொரித்து, பின் பொரித்த காலிப்ளவருடன் ஒருசில சாஸ் மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து கலந்து தயாரிக்கப்படுவதே கோபி மஞ்சூரியன். இந்த கோபி மஞ்சூரியன் ஒரு இந்தியன்-சைனீஸ் ஸ்டைல் உணவாகும்.

ஹோட்டலுக்கு சென்றால், நிறைய பேர் கோபி மஞ்சூரியனை தவறாமல் வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய உலகளவில் மிகவும் பிரபலமான கோபி மஞ்சூரியன் தற்போது கோவாவில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

மபுசா கவுன்சிலர் தாரக் அரோல்கர் கோபி மஞ்சூரியனில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுவதோடு, மோசமான சுகாதாரம் காரணமாக கோபி மஞ்சூரியனை தடை செய்ய முன்மொழிந்தார். குறிப்பாக தெரு வியாபாரிகளால் விற்கப்படும் கோபி மஞ்சூரியனில் கண்ணைக் கவரும் நிறத்தைப் பெற சாய பொடிகள் சேர்க்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.

கோபி மஞ்சூரியன் ரெசிபி பிரச்சனைக்குரியது என்று முதலில் பேசியவர் மபுசா கவுன்சிலர் தாரக் அரோல்கர் தான். இவர் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் போகேஷ்வர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த போது, கோபி மஞ்சூரியனை அனுமதிக்கக்கூடாது என்று அவர் முன்மொழிந்தார்.

இதனால் மபுசா பகுதியில் இது தடைசெய்யப்பட்டது. இதற்கு பலரும் ஆதரவளித்தனர். இந்த கோபி மஞ்சூரியன் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் முட்டைக்கோஸ் நல்ல வண்ணத்துடன் காட்சியளிக்க செயற்கை பொடிகள் சேர்க்கப்படுகிறது. இந்த செயற்கை வண்ண பொடிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. மேலும் இந்த கோபி மஞ்சூரியனுக்கு வழங்கும் சட்னியும் சுத்தமாக இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த கோபி மஞ்சூரியன் தடை குறைத்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தரமற்ற சாஸை பயன்படுத்தியதற்காக விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறினார். மேலும் FDA-ன் படி, விற்பனையாளர்கள் வெளியே நல்ல தரமான சாஸை காட்டிவிட்டு, உணவை பரிமாறும் போது ஆரோக்கியமற்ற மற்றும் தரமற்ற சாஸ் மற்றும் சட்னியை பரிமாறுவதாக கூறுகின்றனர்.இப்படி கோல்மால் நடப்பதால், தற்போது இந்த கோபி மஞ்சூரியன் டிஷ் கோவாவில் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோபி மஞ்சூரியன் முதலில் எப்படி வந்தது?

கோபி மஞ்சூரியன் ஒரு இந்தியன் மற்றும் சைனீஸ் உணவுகளின் கலவையாகும். இது 1975 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த நெல்சன் வாங் என்பவரால் முதன்முதலில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த டிஷ் முதன்முதலாக சிக்கனைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

அதன் பின் சைவ உணவாளர்களுக்காக சிக்கனுக்கு பதிலாக காலிஃப்ளவரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இதில் கரம் மசாலா, இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற இந்திய மசாலாக்கள் சேர்ப்பதன் மூலம் அசல் உணவு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் போன்றவை சேர்க்கப்பட்டது. மொத்தத்தில் கோபி மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியனின் அசலாகும்.

Tags

Next Story
ai in future agriculture