பாலத்தின் அடியில் பண மூட்டைகள்.. சாக்கடையில் அலசியெடுத்த மக்கள்: வீடியோ வைரல்
பாலத்தின் அடியில் ரூபாய் நோட்டுகளை அலசி எடுக்கும் மக்கள்.
பீகார் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசரம் நகரில் உள்ள வாய்க்காலில் ரூபாய் நோட்டுகளை அலசி எடுப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மொராதாபாத் பகுதிக்கு அருகே கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் வீடியா வைரலாகி "பணத்திற்காக மக்கள் எதையும் செய்வார்கள்" என்று கருத்து சமூக ஊடக பயனர்களிடையே கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் தண்ணீரில் மூழ்கியிருந்த ரூபாய் நோட்டுகளின் மூட்டைகளை மீட்டெடுக்க மக்கள் வெறித்தனமாக முயற்சிப்பதைக் காட்டுகிறது. மேலும் மோசமான சாக்கடை நீரில் ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டியிடுவதைக் காணலாம். மொராதாபாத் பாலத்தின் அடியில் சோன் கால்வாயின் முழங்கால் அளவு தண்ணீரிலும் குப்பையிலும் இந்த காட்சி நிலவியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை நடைபயிற்சி செய்பவர்கள் பாலத்தின் அடியில் சணல் பைக்குள் ரூ.20, ரூ.100 மற்றும் ரூ.500 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் குவியலைக் கண்டு தடுமாறி, மூட்டைகளை மீன்பிடிப்பதைப்போல் எடுத்து, அவற்றை காயவைக்க வீட்டிற்கு விரைந்தனர்.
இந்தச் செய்தி பரவியதையடுத்து, அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களால் இயன்ற ரூபாய் நோட்டுகளை சேகரிக்கத் திரண்டனர். சில உள்ளூர்வாசிகள் அந்த நோட்டுகள் உண்மையானவை என்று கூறினாலும், மற்றவர்கள் அவை கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்றும் பீதியை ஏற்படுத்துவதற்காக விதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைரலான வீடியோக்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று ரோஹ்தாஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நவீன் குமார் கூறினார். போலீசார் தற்போது அந்த வீடியோக்களை ஆய்வு செய்து அதில் உள்ள நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu