பெண் குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தை: போலீசார் விசாரணை
பைல் படம்.
Baby Girl Killed By Father-உத்திர பிரதேச மாநிலம் புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்டது சிர்சா கிராமம். இங்கு 28 வயதான ஷபோ பேகம், முகமது ஃபர்ஹான் 32, என்ற விவசாயியை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனையடுத்தது ஷபோ பேகம் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். ஷபோ பேகத்திற்கு 3 வைத்து முறையாக மீண்டும் பெண்குழந்தை பிறந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முகமது ஃபர்ஹான் மருத்துவமனை வளாகத்திலேயே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் வீசியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து ஷபோவின் தாயார் எழுத்துப்பூர்வமாக போலீஸ் புகார் அளித்தாலும், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. "என் கணவருடன் சமரசம் செய்து பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு போலீசார் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்," என்று ஷபோ கூறினார்.
இதற்கிடையில், புரான்பூர் கோட்வாலி SHO அசுதோஷ் ரகுவன்ஷி, தம்பதியினர் இந்த விஷயத்தை சுமுகமாக தீர்த்துக்கொண்டதாகவும், இந்த விஷயத்தில் போலீஸ் நடவடிக்கை எதையும் மனைவி விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், 'தலாக்' கொடுப்பதாக மிரட்டி, தனது கணவர் வயிற்றில் பலமுறை அடித்ததாக ஷபோ பேகம் குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், SHO இன் கூற்றை மறுத்த மனைவி, தனது கணவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் எஃப்ஐஆர் பதிவு செய்ய விரும்பினால், அது பதிவு செய்யப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu