தேசிய ஹோமியோபதி மையத்தில் பெண்கள் விடுதியை ஆயுஷ் அமைச்சர் தொடங்கி வைத்தார்

தேசிய ஹோமியோபதி மையத்தில் பெண்கள் விடுதியை ஆயுஷ் அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

கொல்கத்தா தேசிய ஹோமியோபதி மையத்தில் பெண்கள் விடுதி மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்கும் நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர்கள்.

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கு மத்திய கவுன்சிலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி கழகத்தில், படிக்கும் மாணவிகளுக்கு விடுதி மற்றும் விளையாட்டு மைதானங்கள்( கூடைப் பந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து) ஆகியவற்றை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ச்பாரா மகேந்திரபாய் கலுபாய் பங்கேற்றார்.


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:

கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி மையம் 1975ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கி வளர்ந்து வருகிறது. சுகாதாரத்துறையில் இந்தியா தனது பெருமையை மீண்டும் பெற வேண்டும். ஆயுஷ் துறையானது இந்தியத் தாயின் மகுடத்தில் இடம் பெற வேண்டிய வைர கற்களில் ஒன்றாகும். உலகில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் சுகாதாரப் பாதையை காட்டும் ஆற்றல் ஆயுஸ் துறைக்கு உள்ளது.

ஹோமியோபதியின் தொட்டில் மேற்கு வங்கம். இங்குதான் ஹோமியோபதி வளர்க்கப்பட்டு பிரபலம் அடைந்தது. இதன் வளர்ச்சிக்கும் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

இங்கு மாணவர்களுக்கும் ரூ.50 கோடி செலவில் புதிய விடுதி, புதிய ஆடிட்டோரியம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி டாக்டர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். ஹோமியோபதி ஆராய்ச்சிக்கு மத்திய கவுன்சிலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் பேசினார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் முன்ச்பாரா மகேந்திரபாய் பேசுகையில், ''ஹோமியோபதி மருத்துவத்துக்கு ஆதாரங்களை அறிவியல் சமூகம் கேட்கிறது. ஹோமியோபதி தனிநபருக்கு சிகிச்சை அளிக்கிறது. நோய்க்கு அல்ல. அதனால் நவீன அறிவியல் வகுத்துள்ள விதிகள் படி இது திறன்களை நிரூபிப்பது சிரமம். இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், ஹோமியோபதியை உலகத் தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்