இந்திய வேளாண் ஆராய்ச்சி சபைக்கு விருது

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபைக்கு விருது
X

ஆய்வுக்கூடம் முதல் விளை நிலங்கள் வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை மேற்கொண்டு வரும் வேளாண் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பாராட்டி, தேசிய வேளாண் சஞ்சிகையான அக்ரிகல்ச்சர் டுடே, இந்த சபையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவிற்கு விருது வழங்கியுள்ளது. லே போன்ற தொலைதூர பகுதிகளில் வாழ்வாதாரத்தையும், உற்பத்தி அமைப்பையும் மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானிகளின் சீரிய பணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நிலையான இமாலய சூழலியல் மீதான தேசிய இயக்கத்தின் கீழ், இமாலய வேளாண்மைக்கான பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருணாச்சலம் மற்றும் லே பகுதியின் இணை ஆராய்ச்சியாளரான டாக்டர் எம் ரகுபன்ஷி ஆகியோர் தலைமையிலான குழுவினர், புதிய பயிர்கள் மற்றும் வெவ்வேறு மதிப்பீடுகளின் வாயிலாக விளை நிலங்களில் களைச் செடிகளின் மேலாண்மைக்கான செயல் விளக்கங்கள் மற்றும் சிறந்த வேளாண் செயல்முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

மேலும் லே பகுதியில் நிலையான மற்றும் பருவநிலையை எதிர்கொள்ளும் வேளாண்மையை விவசாயிகள் பெறுவதற்காக அறிவியல் சார்ந்த தகவல்களை வழங்கும் பயிலரங்கங்கள், பயிற்சிகளுக்கும் விஞ்ஞானிகள் குழு ஏற்பாடு செய்தது.

அக்ரிகல்ச்சர் டுடே குழுவால் காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், முதன்மை விஞ்ஞானி டாக்டர் எம் ரகுபன்ஷி, இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!