5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி ஒப்பந்தம்
5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் ஐஐடி, ஜோத்பூர் கையெழுத்திட்டுள்ளன.
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சி-டாட் மற்றும் ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவை "5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு, தொலைத்தொடர்பு தயாரிப்புகள், வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் (டி.டி.டி.எஃப்) கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
5ஜி போன்ற நெட்வொர்க்கில் உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான தகவல்களைப் பயன்படுத்தி தானியங்கி நெட்வொர்க் மேலாண்மை, தவறு கண்டறிதல் மற்றும் குறைபாடுகள் கண்டறியும் தொழில் நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, ஜோத்பூர் ஐஐடியின் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சாய் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் மூலம் போக்குவரத்து அமைப்புகள், பொலிவுறு நகரங்கள் ஆகிய துறைகளில் புதிய பயன்பாட்டை செயல்படுத்த முடியும் என்றும், எதிர்கால 6ஜி தொலைத் தொடர்பு தரங்களுக்கு இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்க அனுமதிக்கும் என்றும் சி-டாட், ஐஐடி-ஜோத்பூர் ஆகியவை உறுதிபட தெரிவித்தன.
இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறியீட்டு அறிக்கை: டிராய் வெளியீடு
2023 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையை" இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் பரந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. 2023 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கேபிள் டிவி, டிடிஎச் & ரேடியோ ஒலிபரப்பு சேவைகளின் முக்கிய அளவுருக்கள் மற்றும் வளர்ச்சி போக்குகளை முன்வைக்கிறது. இது முக்கியமாக சேவை வழங்குநர்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கை டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in மற்றும் http://www என்ற இணைப்பின் கீழ் கிடைக்கிறது.Trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports). இந்த அறிக்கை தொடர்பான ஆலோசனைகள் அல்லது விளக்கங்கள் ஏதேனும் இருந்தால், டிராய் ஆலோசகர் திரு அமித் சர்மாவை தொலைபேசி +91-11-23234367 மற்றும் மின்னஞ்சல்: advfea2@trai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu