ஏ.டி.எம். இயந்திரத்தில் சட்னியுடன் வருது சூடான இட்லி: எங்கே தெரியுமா?
Bengalore, ATM Hot idli with chutney in machineபெங்களூரு நகரில் சூடான இட்லி வழங்கும் ஏ.டி.எம். மையம்.
Bengalore, ATM Hot idli with chutney in machineதகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிப்பு இவற்றின் தொடர்ச்சியாக தானியங்கி பணம் வழங்கும் கருவிகள் எனப்படும் ஏ.டி.எம்.இயந்திரங்கள் ஏ.டி.எம். கார்டை சொருகிய உடன் நமக்கு பணத்தை தருகின்றன. ஏடி.எம்.மில் பணம் மட்டும்தான் எடுக்க முடியுமா? சூடாக இட்லியும் சட்னியுடன் வரும் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவுடன் வைரலாக பரவி வருகிறது.
Bengalore, ATM Hot idli with chutney in machineஏ.டி.எம்.மில் சூடான இட்லி சட்னியுடன் எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா? வெளிநாட்டில் அல்ல. நமது இந்திய திருநாட்டின் பெங்களூரு நகரில் தான் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறது. ஏ.டி.எம்.இயந்திரத்தின் மூலம் இட்லி வழங்கும் மையம் பெங்களூருவில் இரண்டு இடங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நவீன இயந்திரத்தை கண்டுபிடித்தவர்கள் பெங்களூரை மையமாகக் கொண்ட இரு இளம்தொழில் முனைவோர்கள் ஆவார்கள். சரண் ஹர்மித் மற்றும் சுரேஷ் சந்திரசேகர் என்ற இருவரும் தான் இந்த தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை ஏ.டி.எம். உடன் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் ரோபோடிக்ஸ் முறையில் வடிவமைத்திருக்கிறார்கள்.
Bengalore, ATM Hot idli with chutney in machineஇந்த ஏ.டி.எம்.இயந்திரத்தின் முன்னால் நின்று கொண்டு அதில் உள்ள கியூ. ஆர். கோடை நமது ஸ்மார்ட் செல்போனில் ஸ்கேன் செய்தவுடன். நமக்கு வீடியோ இணைப்பு கிடைக்கிறது. அதில் இட்லி, சட்னி இமேஜ் வரும். அதில் நமக்கு தேவையானவற்றை நாம் டச் செய்து. உரிய பணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தினால், அதிகபட்சமாக ஒரு நிமிடத்தில் நமக்கு நாம் என்ன ஆர்டர் செய்தோமோ அந்த இட்லிகள் சூடாக ஏ.டி.எம். எந்திரத்தின் வழியாக நமக்கு வந்து சேருகின்றன. அதுவும் சூடாக சட்னியுடன் கிடைக்கிறது.
Bengalore, ATM Hot idli with chutney in machineஇந்த இயந்திரத்தில் 24 மணி நேரமும் சூடாக இட்லி கிடைக்கும் என்பது கூடுதல் தகவலாகும். தானியங்கி முறையில் 72 இட்லிகள் தயாரிக்க 12 நிமிடம் ஆகிறது. இந்த தானியங்கி இயந்திரத்தின் மூலம் இந்த இட்லி தயாரிக்கும் தானியங்கும் இயந்திரம் மற்றும் ஏ.டி.எம். கருவியுடன் அதனை இணைத்தது பற்றி அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான சரண் ஹர்மித் கூறுகையில் 'கடந்த 2016 ஆம் ஆண்டு எனது மகள் நோயால் பாதிக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு பின்னிரவு நேரங்களில் சூடாக இட்லி தேவைப்பட்டது. ஆனால் நான் எங்கெங்கோ சென்று அலைந்து பார்த்தாலும் சூடாக இட்லி கிடைக்கவில்லை. அப்போதுதான் எனக்கு ஒரு சிந்தனை உருவானது. நாம் ஏன் தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி ஏ.டி.எம். மூலம் அவற்றை மக்களுக்கு எளிதாக வழங்க கூடாது? என யோசித்தேன். அதன் விளைவாக தான் இப்போது இந்த கருவியை தயாரித்து இருக்கிறோம்' என்றார்.
Bengalore, ATM Hot idli with chutney in machineதென்னிந்திய மக்களின் விருப்ப மெனு பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும் இந்த இட்லி உணவினை அடுத்த கட்டமாக பெங்களூரு நகரின் மேலும் பல இடங்களிலும், தொடர்ந்து மற்ற நகரங்களிலும் இந்த சேவையை விரிவாக்கம் செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Bengalore, ATM Hot idli with chutney in machineமுன்னொரு காலத்தில் சுற்றுலா பயணம் மற்றும் வெளியூர் பயணத்தின் போது மக்கள் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்றார்கள். பின்னர் வழி நெடுக உள்ள சத்திரங்களில் தங்கி உணவு சாப்பிட்டார்கள்.அதன் பின்னால் தடுக்கி விழுந்தால் ஹோட்டல் என்ற நிலை வந்ததும் மக்கள் ஆங்காங்கே ஓட்டல்களில் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தார்கள். அதன் பின்னர் ஓட்டலுக்கு சென்று சாப்பிட சோம்பேறித்தனம், நேரமின்மை, தயக்கம் காட்டியவர்களுக்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவு வழங்கும் முறை வந்தது. தற்போது உபேர் மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு ஹோட்டல்களில் இருந்து தங்களது ஊழியர்கள் மூலம் உணவினை வீட்டிற்கு சென்று டெலிவரி செய்கிறார்கள் .
Bengalore, ATM Hot idli with chutney in machineஇது ஒருபுறம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக தற்போது ஏ.டி.எம். இயந்திரம் மூலம் இட்லி வழங்கும் சேவையும் தொடங்கி இருப்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட முன்னேற்றமாக தான் பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu