அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 1 ம்தேதி 2-ம் கட்டத் தேர்தல்

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 1 ம்தேதி      2-ம் கட்டத் தேர்தல்
X

அசாம் மாநிலத்தில் நாளை மறுநாள் ஏப்ரல்1ம்தேதி 2-ம் கட்டத் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத்தில் 47 தொகுதிகளுக்குக் கடந்த 27-ம் தேதி தேர்தல் முடிந்தது, மொத்தம் 79 சதவீதம் வாக்குப்பதிவானது.இந்தத் தேர்தல் பாஜக, அசாம் கனபரிஷத் (ஏஜிபி) கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஏஐயுடிஎப் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது..

39 தொகுதிகளில் மொத்தம் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73,44,631 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் அமைச்சர் பைதியா பாஜக சார்பில் 7-வது முறையாகத் தோலை தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்தத் தேர்தலில், அசாம் அமைச்சர்கள் பியூஷ் ஹசாரிகா, பரிமால்சுக்லா பைதியா, பாபேஷ் கலிதா, துணை முதல்வர் லஸ்கர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடந்து முடிந்தபின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த மாநிலத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக காணப்படுகிறது

இந்த 39 தொகுதிகளில் 15 தொகுதிகள் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் வருகிறது, இதில் பெரும்பாலான எல்லைகள் வங்கதேசத்துடன் இணைக்கின்றன என்பதால் முக்கியமான பகுதியாகும்.இந்த 15 தொகுதிகளும் காங்கிரஸ், பாஜகவின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியத் தொகுதிகளாக இருக்கும்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி