அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகாத கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை விசாரணைக்கு  இன்று ஆஜர் ஆகாத கெஜ்ரிவால்
X

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

சம்மன் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாஜகவின் உத்தரவின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அமலாக்கத்துறைக்கு கடிதம்

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த திங்கட்கிழமை அனுப்பிய சம்மனில், இன்று அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அரவிந்த கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விசாரணைக்குப்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சம்மன் "சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டு, " நான்கு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரம் செய்வதிலிருந்து என்னைத் தடுக்க பாஜகவின் உத்தரவின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனை "உடனடியாக" திரும்பப் பெறுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆஜராக நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் சாலைபேரணி நடத்த மத்தியப் பிரதேசம் செல்கிறார். அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ள கலால் கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆம் ஆத்மி கட்சி மேலிடத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது .

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கெஜ்ரிவால் ஆஜராவதற்கான ஏற்பாடுகளை டெல்லி காவல்துறையினர் செய்திருந்தனர்.அமலாக்கத்துறை அலுவலகம், ராஜ்காட் மற்றும் ஆம் ஆத்மி அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்தது, மேலும் இந்தியாவின் முன்னணி கூட்டணி தலைவர்களை குறிவைக்கும் பாஜகவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கெஜ்ரிவால் முதலில் கைது செய்யப்படுவார் என்று ஆம் ஆத்மி முன்பு அச்சம் தெரிவித்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்