ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?

ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?
X

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 

அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவைக் குறிப்பிட்டு இவர் திஹார் சிறை நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்தார்.

ஜெயிலில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி இருக்கும் நிலையில், அவருக்கு அதிக இனிப்புள்ள சாப்பாடு கொடுக்கப்பட்டு அவரை ஸ்லோ டெத் அடையச் செய்யும் வகையில் கொடுமை நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்சுலின் மற்றும் அவரது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இது ஆளுங்கட்சியின் அடக்குமுறை என ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ள இன்சுலின் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை வழங்க மறுப்பதன் மூலம் திகார் சிறையில் அவர் ஸ்லோ டெத் நோக்கி தள்ளப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரப் பரத்வாஜ், டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்சுலின் மற்றும் அவரது குடும்ப மருத்துவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரித்து வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவைக் குறிப்பிட்டு இவர் திஹார் சிறை நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்தார்.

டெல்லி முதல்வர் கடந்த 20-22 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அவர், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் திகார் நிர்வாகம், பாஜக, மத்திய மற்றும் டெல்லி துணைநிலை ஆளுனர் ஆகியோரை அவர் கடுமையாக சாடினார்.

முதலமைச்சரின் கவுன்சில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, திரு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் வழங்கப்படவில்லை, இது "அதிர்ச்சி அளிக்கிறது" மற்றும் "ஆபத்தானது" என்று கூறியுள்ளார்.

அதேநேரம் இது நாடகம் எனவும், இதனை கெஜ்ரிவால் திட்டமிட்டு செய்வதாக ED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஜாமீன் பெறுவதற்காக திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் கெஜ்ரிவால் எனவும், வகை 2 நீரிழிவு நோய் இருந்தபோதிலும், கெஜ்ரிவால் தினமும் மாம்பழம் மற்றும் இனிப்புகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள உணவை உட்கொள்கிறார் என்று ED நீதிமன்றத்தில் கூறியது.

இருந்தாலும் இதனை கெஜ்ரிவால் தரப்பு மறுத்துள்ளது. இது கெஜ்ரிவாலின் மருத்துவர் சொல்லிய டயட் பிளான் தான் எனவும், கிட்டத்தட்ட 48 வகை உணவுகளில் வெறும் 3 முறைதான் மாம்பழங்கள். அளவில் குறைவாகவே கெஜ்ரிவால் சாப்பிட்டிருக்கிறார் என சிங்வி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, திரு கெஜ்ரிவாலின் பல உறுப்புகள் சேதமடைவதற்கான ஒரு சதி இது, 2-4 மாதங்களுக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் சிறுநீரகம், இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கச் செல்வார்”என்று டெல்லி அரசில் சுகாதாரத் துறையை வைத்திருக்கும் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business