கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு கண்காட்சி: பிரதமர் நாளை தொடங்கி வைப்பு

கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு கண்காட்சி:  பிரதமர் நாளை தொடங்கி வைப்பு
X
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நாட்டில் ஒரு முதன்மையான உலகளாவிய கலாச்சார முன்முயற்சியை உருவாக்குவதற்கும் நிறுவனமயமாக்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தக் கண்காட்சியின் போது வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு கருப்பொருள் அடிப்படையிலான கண்காட்சிகள் இடம்பெறும். செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.

'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ' என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துவதுடன், புதிய வடிவமைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் கைவினைஞர் சமூகங்களை இந்த மையம் வலுப்படுத்தும். சாமுன்னாட்டி - மாணவர் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நாளை ( டிசம்பர் 8 ஆம் தேதி) மாலை 4 மணியளவில் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி 2023- ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தையும், சாமுன்னாட்டி எனப்படும் மாணவர் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

வெனிஸ், சாவ் பாலோ, சிங்கப்பூர், சிட்னி, ஷார்ஜா போன்ற இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளைப் போன்ற ஒரு முதன்மையான உலகளாவிய கலாச்சார முன்முயற்சியை நாட்டில் உருவாக்கி நிறுவனமயமாக்குவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அருங்காட்சியகங்களை புதுப்பித்தல், மறுபெயரிடுதல், புதுப்பித்தல், மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கான நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்பட்டது. மேலும், கொல்கத்தா, தில்லி, மும்பை, அகமதாபாத், வாரணாசி ஆகிய இந்தியாவின் ஐந்து கலாச்சார நகரங்களின் மேம்பாடு அறிவிக்கப்பட்டது. இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி தில்லியில் கலாச்சார வெளிக்கு ஒரு அறிமுகமாக செயல்படும்.

டிசம்பர் 9 முதல் 15 வரை புதுதில்லி செங்கோட்டையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி (மே 2023) மற்றும் நூலகங்களின் திருவிழா (ஆகஸ்ட் 2023) போன்ற முக்கிய முன்முயற்சிகளையும் இது பின்பற்றுகிறது. கலாச்சார உரையாடலை வலுப்படுத்த கலைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், சேகரிப்பாளர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒரு முழுமையான உரையாடலைத் தொடங்குவதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பின் படைப்பாளிகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பதற்கும் இது வழிகளையும் வாய்ப்புகளையும் வழங்கும்.

ஐ.ஏ.ஏ.டி.பி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கருப்பொருள் அடிப்படையிலான கண்காட்சிகளைக் காட்சிப்படுத்தும்:

• நாள் 1: இந்தியாவின் கதவுகள்

• நாள் 2: இந்தியாவின் தோட்டங்கள்

• நாள் 3: இந்தியாவின் பாவ்லிகள்

• நாள் 4: இந்தியக் கோயில்கள்

• நாள் 5: சுதந்திர இந்தியாவின் கட்டிடக்கலை அதிசயங்கள்

• நாள் 6: உள்நாட்டு வடிவமைப்புகள்

• நாள் 7: கட்டுமானத்தை வடிவமைத்தல்: கட்டிடக்கலையில் பெண்களைக் கொண்டாடுதல்

மேற்கூறிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட அரங்குகள், குழு விவாதங்கள், கலைப் பட்டறைகள், கலை பஜார், பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் இணையான மாணவர் கண்காட்சி ஆகியவை ஐ.ஏ.ஏ.டி.பி. லலித் கலா அகாடமியில் நடைபெறும். மாணவர் கண்காட்சி (சாமுன்னாட்டி) மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கும், சகாக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகொள்வதற்கும், வடிவமைப்பு போட்டி, பாரம்பரியத்தை காட்சிப்படுத்துதல், நிறுவல் வடிவமைப்புகள், பட்டறைகள் போன்றவற்றின் மூலம் கட்டிடக்கலை சமூகத்தில் மதிப்புமிக்க வெளிப்பாட்டைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

பிரதமரின் 'உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, செங்கோட்டையில் 'தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையம்' அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் தனித்துவமான மற்றும் உள்நாட்டு கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும். கலைஞர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டு இடத்தை வழங்கும். ஒரு நிலையான கலாச்சார பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், இது கைவினைஞர் சமூகங்களை புதிய வடிவமைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் வலுப்படுத்தும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!