நாளை ராணுவ தளபதிகள் மாநாடு : பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ராணுவ தளபதிகள் மாநாடு இம்மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது. இராணுவத் தளபதிகள் மாநாடு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் ஒரு உயர் நிலை மாநாடு ஆகும். இந்த மாநாடு கருத்தியல் அளவிலான விவாதங்களுக்கான ஒரு நிறுவன தளமாகவும், இந்திய இராணுவத்தின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான தளமாகவும் உள்ளது.
இந்த மாநாட்டில், நாட்டின் எல்லைப்பகுதிகளில் செயல்பாட்டில் இருந்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள்,ஆகியவற்றை ராணுவத்தின் மூத்த தலைவர்கள் ஆய்வு செய்கின்றனர். மேலும், திறன் மேம்பாட்டு செயல்திட்டங்களின் தயார்நிலை, திறன் வெற்றிடங்கள் குறித்த பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு தொழிநுட்பங்களின் மூலம் நவீனமயமாக்கல், முக்கிய தொழில்நுட்ப பயன்பாடுகல்லுக்கான தூண்டுதல் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பான த்தையும் மதிப்பீடு போன்ற அம்சங்கள் குறித்த விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெறும்.
இந்திய ராணுவத்தில் பணிகள் மேம்பாடு, நிதி மேலாண்மை, மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற திட்டங்களைத் தவிர, மண்டல அளவிலான பல்வேறு அம்சங்கள் குறித்தும் மூத்த தளபதிகளால் விரிவாக விவாதிக்கப்படும். மாநாட்டின் ஒரு பகுதியாக, ராணுவ நலக் கல்விச் சங்கம் (AWES) மற்றும் ராணுவக் குழுக் காப்பீட்டு நிதியம் (AGIF) ஆகியவற்றின் ஆளுநர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த ராணுவத் தளபதிகளுதானான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின், ஏப்ரல் 21-ம் தேதி மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் உரையாடுவதற்கான ஒரு முறையான மன்றமாகவும், ராணுவ விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிகழ்வுகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu