ஆந்திராவிற்கு போறீங்களா? மறந்தும் கோழிக்கறி சாப்பிட்டு விடாதீங்க
சேவல் சண்டையில் ஒரு காட்சி (கோப்பு படம்)
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல்களுக்கு ‛வயாகரா' கொடுக்கப்படுவதால் ஆந்திராவிற்கு செல்பவர்கள் கோழிக்கறி சாப்பிடாமல் இருப்பது நல்லது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தை போல் நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு மகர சங்கராந்தி என்ற பெயரில் 3 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நாம் நமது வீரத்தை வெளிப்படுத்த காளைகளை அடக்கி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துகிறோம். இந்த விழாக்கள் தமிழ்நாடு முழுவதும் களை கட்டும்.
இதே போல் ஆந்திராவில் சேவல் சண்டை, கிடா சண்டைகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்களுக்கு ‛வயாகரா' வழங்கப்படுகிறது. சேவல்களுக்கு ‛வயாகரா' அளிப்பதற்கு முக்கிய காரணம் அங்கு பரவும் ராணிகேத் நோயாகும். அதாவது சங்கராந்தி் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டைகள் மூலம் சிலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்கள்.
தற்போது சேவல்களுக்கு ‛ராணிகேத்' நோய் பரவுகிறது. இதனால் சேவல்கள் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் அந்த சேவல்களை வைத்து சண்டையிட்டு பணம் சம்பாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை சரிசெய்யவும், சேவல் சண்டையில் வெற்றி பெற்று அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் தான் தற்போது சண்டை சேவல் வளர்ப்போர் சேவல்களுக்கு ‛வயாகரா 100, ஷிலாஜித் உள்பட பாலுணர்வை தூண்டும் மருந்துகளை கொடுக்கின்றனர்.
இதன்மூலம் சேவல் புத்துணர்வு பெறுவதுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் என சேவல் வளர்ப்போர் நம்புகின்றனர். இருப்பினும் சேவல்களுக்கு ‛வயாகரா' உள்ளிட்ட பாலுணர்வை தூண்டும் மருந்துகள் கொடுப்பது என்பது சேவல்களுக்கும், அதனை சமைத்து உண்ணும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் கூட தற்போது ஆந்திராவில் குண்டூர், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் இத்தகைய செயலில் மக்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆந்திர மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி சேவல் வளர்ப்போர்களிடம் கேட்டபோத ‛‛ராணிகேத் நோய் தாக்குதலுக்கு பிறகு சேவல்கள் சோர்வாகி உள்ளன. தரமான சண்டை சேவல்களும் முடங்கி உள்ளன. இதனால் சேவல்களை மீட்க இதுபோன்ற மருந்துகளை கொடுத்து வருகிறோம்'' என தவறை உணராமல் தெரிவித்துள்ளனர்.
எனவே ஆந்திராவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மறந்தும் கோழிக்கறி சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கோழிகளுக்கு வழங்கப்படும் வயாக்ராவினால் நமக்கு ஏதாவது நோய் வந்து விடப்போகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu