மறுமுறை பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்களால் இவ்வளவு பிரச்னையா?

மறுமுறை பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்களால் இவ்வளவு பிரச்னையா?
X

பைல் படம்.

சராசரியாக கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீயா கிருமிகளை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியா கிருமிகள் மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களில் இருக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள வாட்டர் பில்டர் குரு டாட் காம் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளை சேகரித்து ஆய்வை மேற்கொண்டது. தண்ணீர் பாட்டில்களில் பல வகையான மூடிகளை கொண்ட பாட்டில்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறை பரிசோதித்ததில் பேசிலஸ் என்ற பாக்டீரியா அதிகம் இருப்பதாக கண்டறிந்தனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த பாக்டீரியா கிருமிகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பாட்டில்களில் கிச்சன் சிங்கை விட 2 மடங்கு கிருமிகளும் கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்காளும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தை விட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றனர்.

ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களை உபயோக்கிக்கையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நுண்ண்யிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் கூறுகையில், “ பாட்டில்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும் அது ஆபத்தானது இல்லை. மேலும் இந்த தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தியதால் ஒரு மனிதன் நோய்வாய்பட்டதாக நான் கேள்விபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா