ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் தினம்

ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் தினம்
X
2014 ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது.

2014 ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள்

கேள்விக்குறியாக இருந்த திருநங்கையர் வாழ்வை ஆச்சரியக்குறியாக மாற்றியிருப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. திருநங்கை, திருநம்பி, திருநர் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களைப் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவுமே இல்லாத 1990-களில் இந்தியாவிலேயே முதன் முதலாக 'அகில உலக அலிகள் நலவாழ்வு சங்கம்' நூரி அம்மாள் உள்ளிட்ட மூத்த திருநங்கைகளால் 1996-ல் சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்புதான் பொதுச் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு திருநர் சமூகத்தின் பிரச்சினைகளை அவர்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்த்தது. இப்படித் தொடங்கப்பட்ட நலச் சங்கம் படிப்படியாக வளர்ந்தது, 2008 ஏப்ரல் 15 அன்று தமிழக அரசால் 'அரவாணிகள் நல வாரியம்' தொடங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த தருணங்கள், தேசிய திருநங்கையர் தினமாக ஒட்டுமொத்த இந்தியாவும் ஏப்ரல் 15ஐ ஏற்றுக்கொண்டது

இந்தியாவிலேயே முதன் முறையாகத் தேசிய கலாச்சார நிதியத்தின் ஆலோசகராக மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த திருநங்கைச் செயற்பாட்டாளர் ஊர்வசி காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். 'தாய் விழுதுகள் திருநங்கைகள் கூட்டமைப்'பின் செயலாளராகவும், தலைவராகவும் இருந்தவர். அதோடு, சென்னை 'வாலண்டரி ஹெல்த் சர்வீஸ்' தமிழ்நாடு நோய்த் தடுப்புப் பணியில் திருநங்கை மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றியிருப்பவர் ஊர்வசி.

'யாசகம் கேட்பதிலும் பாலியல் தொழில் செய்வதிலும் எங்களுக்கு விருப்பமில்லை. வீடும் சமுதாயமும் புறக்கணித்தால் வேறென்ன செய்ய முடியும். வைராக்கியத்துடன் வாழ்ந்து சமுதாயம் மரியாதையுடன் பார்க்கும் நிலைக்கு ஒரு சிலர் தான் முன்னேறியுள்ளோம். எங்கள் சமுதாயம் முன்னேற கல்வி, வேலை வாய்ப்பில் தமிழக அரசு ஒரு சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும்' என்கின்றனர் திருநங்கையர்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!