பெண்களின் பாதுகாப்புக்காக 3 ஆண்டுகளில் ரூ.3856.70 கோடிக்கு ஒப்புதல்

பெண்களின் பாதுகாப்புக்காக 3 ஆண்டுகளில் ரூ.3856.70 கோடிக்கு ஒப்புதல்
X

கோப்பு படம் 

பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3856.70 கோடிக்கு ஒப்புதல் : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு, பல திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.3856.70 கோடி அனுமதித்துள்ளது. இதில் ரூ.2282.59 கோடி இது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 461.16 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.276.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!