தேசிய புலனாய்வு முகமை இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

தேசிய புலனாய்வு முகமை இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
X
தேசிய புலனாய்வு முகமை புதிய இயக்குனர் ஜெனரல் தின்கர் குப்தா.
தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் ஜெனரலாக ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தாவை மத்திய அரசு நியமித்து உள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா பஞ்சாப் பிரிவில் 1987 - ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி 2024-ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி ஓய்வு பெறும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார்.

மேலும் மத்திய அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக (உள்துறை பாதுகாப்பு) ஸ்வாகர் தாஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இவர் சத்தீஷ்காரில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் எனவும், 2024ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story