பத்ம விருதுகள் 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பத்ம விருதுகள் 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

வரும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குடியரசுதின விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகள் 2023-க்கான இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் 15ம் தேதி இதற்கான கடைசி நாள் ஆகும். பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருதுகளுக்கான https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே ஏற்கப்படும்.

நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளாக பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின விழா நாளில் அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், பொது விஷயங்கள், சிவில் சேவைகள், வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் சிறப்புமிக்க பணியாற்றியவர்கள், சாதனை புரிந்தவர்கள், சேவை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பதவி நிலை, பாலினம் என எந்த பாகுபாடுமில்லாமல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பத்ம விருதுகள் பெற தகுதி இல்லாதவர்கள்.

பத்ம விருதுகளை மக்களின் பத்ம என்று மாற்றம் செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, இந்திய குடிமக்கள் அனைவரும் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது மற்றவர்களை பரிந்துரை செய்யலாம்.

சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் பெண்கள், நலிந்தபிரிவினர், எஸ்சி / எஸ்டி வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களை பரிந்துரை செய்ய அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள், பாரத ரத்னா, பத்மவிபூஷன், விருதுபெற்றவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) 'விருதுகள்' மற்றும் 'பதக்கங்கள்' என்ற தலைப்பில் காணலாம். பத்ம விருதுகள் இணையப் பக்கத்திலும், (https://padmaawards.gov.in) விவரங்களை அறியலாம். பத்ம விருதுகள் பற்றிய விதிமுறைகளை அறிந்து கொள்ள https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையப் பக்கத்தில் காணலாம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!