/* */

விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்யப்பட்டது என விளக்கமளித்த பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

HIGHLIGHTS

விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி
X

பிரதமர் நரேந்திர மோடி

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 11 மாதங்களாக தில்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள்போராடி வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் வருகிற நாடாளுமன்றக் கூட்டுத் தொடரில் அதற்கான சட்டம் திறம்பப் பெறும் என அறிவித்தார்.

பின் ஏன் அச்சட்டங்களை அரசு கைவிடுகிறது என விளக்கமளித்த மோடி தன் உரையில் 'வேளாண் சட்டத்தின் பயனைஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.வேளாண் சட்டங்களின் பயனைவிளக்க முடியாதது எங்கள்தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில்பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். அக்குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்' என்றார்.

Updated On: 19 Nov 2021 8:17 AM GMT

Related News