காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு: 12 பேர் காயம்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு: 12 பேர் காயம்
X

குண்டு வெடித்த இடத்தில் ரோந்து செல்லும் ராணுவத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் குண்டு வெடித்தது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகரில் உள்ள சண்டே மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள டிஆர்சி அருகே கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற பின்னர் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. என்கவுன்டரில், ஒரு பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வெடிவிபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் தான் ஸ்ரீநகரில் சண்டே மார்க்கெட் பகுதியில் உள்ள TRC அருகே கையெறி குண்டு தாக்குதல் இன்று நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கவும், பயங்கரவாதிகளைத் தேடுவதற்கும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடி சத்தம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியதால் கடைக்காரர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் யார், யார்?

நௌகம் தந்திரியில் வசிக்கும் முகமது அமீனின் மகள் மிஸ்பா, வயது 17.

நூர்பாக்கில் வசிக்கும் ஜாவேத் அகமது கலுவின் மகன் ஆசான் கலு, வயது 17.

கலுசா பந்திபோராவில் வசிக்கும் அப்துல் ஜப்பாரின் மகள் ஹபிபுல்லா ராதர், வயது 50.

சோபியான் அம்ஷிபோராவில் வசிக்கும் அப்துல் ரஷீத்தின் மகன் அல்தாப் அகமது சீர் வயது 21.

கன்யாரில் வசிக்கும் பையாஸ் அகமது பேக் என்பவரின் மகன் பைசல் அகமது வயது 16.

பட்டானில் வசிக்கும் ஃபரூக் அகமது பட் என்பவரின் மகன் உஜ்ஜர் ஃபரூக் பட்.

பாம்பூரில் வசிக்கும் முஷ்டாக் அகமது சோபி என்பவரின் மகன் பைசான் முஷ்டாக் வயது 20.

செக்போரா கலன் நௌகம் பகுதியில் வசிக்கும் குல்சார் அகமது வானியின் மகன் ஜாஹித் வானி வயது 19.

சட்பால் பகுதியைச் சேர்ந்த குலாம் அகமது என்பவரின் மகன் குலாம் முஹம்மது சோபி, வயது 55.

சுமையா ஜான், வயது 45, நைட்காய், சும்பலில் வசிக்கும் சுபைர் அகமது லோனின் மனைவி.

முதல்வர் உமர் அப்துல்லா கூறுவது என்ன?

ஸ்ரீநகரின் ‘சண்டே மார்கெட்டில்’ அப்பாவி கடைக்காரர்கள் மீது இன்று கையெறி குண்டுகள் வீசப்பட்ட செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதல் அலையை விரைவில் நிறுத்த பாதுகாப்பு எந்திரம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், இதனால் மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!