செப்டம்பர் 27ம் தேதி முதல் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா

Tirupathi Temple -திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் கோவில் உள்ளே நடத்தப்பட்டது. மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை, அதேநேரம் பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 1-ம் தேதி கருட சேவையும், 2ம் தேதி தங்க தேரோட்டம், 4-நம் தேதி தேரோட்டம், 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நடக்கும் கோவிலின் 4 மாட வீதிகளில் பிரம்மாண்டமாக வாகன சேவை நடத்தப்பட உள்ளது. இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால்,அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருவோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை அன்று கருட சேவை நடப்பதால், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu