கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வை 3வது இடத்திற்கு தள்ளிய அண்ணாமலை
அண்ணாமலை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதிமுகவை அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
இந்தியா முழுவதும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் உள்ளனர். இரண்டாவது இடத்தை பிடிப்பதில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவுறது. அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிட்ட கோவை நாடாளுமன்ற தொகுதி மிக முக்கியமான தொகுதியாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் மோடி கூட இங்கு வந்து ரோடு ஷோ நடத்தினார். ஆனால் இங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வைக்கிறார். இரண்டாவது இடத்தில் அண்ணாமலை உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளி உள்ளார். இந்த நிலை தொடருமா அல்லது அதிமுக இரண்டாவது இடத்தை பிடிக்குமா என்பது போக போகத்தான் தெரியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu