அமெரிக்காவில் வீட்டு வாசலில் அமிதாப்பின் உருவச்சிலை

அமெரிக்காவில் வீட்டு வாசலில் அமிதாப்பின் உருவச்சிலை
X
Amitabh Bachchan Current News -அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளனர்

Amitabh Bachchan Current News -அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிப்பவர் குஜராத்தைச் சேர்ந் கோபி சேத். இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறிய அவர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

தனது சிலை வைக்கப்பட்டது குறித்து அமிதாப் கூறுகையில், 'நான் இதற்கு தகுதியானவன் அல்ல' என அவர் பணிவுடன் தெரிவித்ததாக கோபி சேத் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!