யாருக்காவது தைரியம் இருக்கா? ராகுலை பொளந்துகட்டிய அமித் ஷா!
காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ராகுல் காந்தியைக் குறிப்பிட்டு அமித்ஷா பேசியுள்ளார். அதிலும் யாருக்காவது தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மோடியின் உழைப்பு பற்றியும் அவர் பேசி வாக்கு சேகரித்தார்.
இந்திய பாராளுமன்றத்துக்கான மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 16ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களிலுள்ள 102 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. அடுத்ததாக ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் இருக்கும் 89 தொகுகளிலும், 3வது கட்டமாக 12 மாநிலங்களிலுள்ள 94 தொகுகளில் மே 7ம் தேதியும், மே 13ம் தேதி 10 மாநிலங்களில் அமைந்துள்ள 96 தொகுதிகளில் 4வது கட்டமாகவும் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக 5 வது மற்றும் 6 வது கட்ட தேர்தல்கள் முறையே, மே 20 மற்றும் 25ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
8 மாநிலங்களிலுள்ள 49 தொகுகளில் 5 வது கட்டமாகவும், 7 மாநிலங்களிலுள்ள 57 தொகுதிகளில் 6வது கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. கடைசி கட்டமாக ஜூன் 1ம் தேதி 57 தொகுகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் குறித்த விவகாரம் பற்றி அமித்ஷா பேசியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புக்காக அவரை அமித்ஷா பாராட்டினார். மேலும் ராகுல், மோடி இருவரையும் ஒப்பிட்டு பேசிய அமித்ஷா, ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.
பிரதமர் மோடி கடந்த 23 ஆண்டுகளாக எந்த விடுமுறையும் இல்லாமல் நாட்டிற்காக உழைத்து வருகிறார், அதேசமயம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்கு விடுமுறைக்கு செல்கிறார் என்று அவர் அதிரடியாக கருத்தை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைகளால் காஷ்மீர் கொந்தளிப்பு குறித்த முப்தி மற்றும் காந்தியின் கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என அவர்கள் கூறினர். ஆனால் நடப்பவை எதுவும் அப்படி தெரியவில்லையே என்று கேட்டார். 370வது சட்டப்பிரிவை நீக்குவோம் என்ற மோடி அரசின் வாக்குறுதிக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் இங்கு ரத்த வெள்ளம் ஏற்படும் என்று ராகுல் காந்தி கூறி வந்தார்.
ஆனால், அந்த பிரிவை நீக்கி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, இரத்த ஆறு என்ற பேச்சை விடுங்கள், அங்கே கல்லை எறியும் துணிச்சல் யாருக்காவது இருக்கிறதா என்று தனது பேச்சை உயர்த்தினார். இவ்வாறு அமித்ஷா பாஜகவுக்காக வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu