டெல்லி விமான நிலையம் அருகே பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

டெல்லி விமான நிலையம் அருகே பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்தியா விமானம்
X

பாலத்திற்கு அடியில் சிக்கிய விமானம்

ஏர் இந்தியா விமானம் ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கி இருப்பது சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்கள் செல்வதையும், மறுபுறம் விமானம் சிக்கிக்கொண்டுள்ளதையும் காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் தளங்களிலும் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது, விமானம் எப்படி முதலில் சிக்கிக்கொண்டது என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், விமானம் ஸ்கிராப் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை வாங்கியவர் எடுத்து சென்றபோது மேம்பாலத்தின் கீழ் சிக்கியதாக கூறியது.

விமானம் ஏர் இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்பதை டெல்லி விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார் .

"விமானம் நிச்சயமாக டெல்லி விமான நிலையத்திற்கு சொந்தமானது அல்ல, வீடியோவில், அது எந்த இறக்கையும் இல்லாமல் கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு சிதைந்த விமானம் போல் தோன்றுகிறது மற்றும் அதை எடுத்துச் செல்லும் போது ஓட்டுநர் பிழை செய்திருக்கலாம்" என்று அந்த அதிகாரி கூறினார் .

ஆச்சரியப்படும் விதமாக, சாலையில் சிக்கிய விமானத்தைப் பார்த்து பொதுமக்கள் குழப்பமடைவது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிச் சென்ற லாரி மேற்கு வங்கத்தின் துர்காபூரில் பாலத்தின் கீழ் சிக்கியது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!