இங்கிலாந்து கடற்படைத் தளபதியின் மூன்று நாள் இந்திய பயணம்

இங்கிலாந்து கடற்படைத் தளபதியின்  மூன்று நாள் இந்திய பயணம்
X
இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தியா வந்தார்

இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங்கை சந்தித்துப் பேசினார். இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இருதரப்பினரும் ஆலோசித்தனர்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்குக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் செல்லும் இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின், வைஸ் அட்மிரல் ஆர் ஹரிகுமாரைச் சந்தித்துப் பேசினார்.

ஏராளமான விஷயங்களில் இங்கிலாந்து மற்றும் இந்தியக் கடற்படைகள் இணைந்து செயல்படுகின்றன. இருதரப்பினரிடையே கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுகின்றன, கடல்சார் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தப் பயணம் இருநாடுகளிடையேயான கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!